tamilnadu

img

போபாலிலிருந்து 365 பேர் காஷ்மீர் அனுப்பி வைப்பு

போபால், மே 9- ஊரடங்கு காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் சனிக்கிழமை முதல் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த 365 காஷ்மீர் மாணவர்கள் 18 குளிர்சாதன பேருந்துகள் மூலம் போபாலிலிருந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அம்மாநில பொதுமக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.